🕺🏻‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பாக்ஸிங் ஸ்டைலில் நடனம் ஆடிய ’சார்பட்டா’ டான்சிங் ரோஸ்🕺🏻

 ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பாக்ஸிங் ஸ்டைலில் நடனம் ஆடிய ’சார்பட்டா’ டான்சிங் ரோஸ்


‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ‘சார்பட்டா’ டான்சிங் ரோஸ் ஷபீர் உற்சாகமுடன் நடனமாடியிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இயக்குநர், பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’  திரைப்படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமாத்துறையினரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். படத்திற்கு ஒருபுறம் கிடைக்கும் பாராட்டு இருந்தாலும் குறிப்பாக, இப்படத்தில் ’டான்சிங் ரோஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த ஷபீருக்கு திடீர் ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். உடல் மொழியாலேயே நடிப்பில் மிரட்டியிருப்பார்.


இந்த நிலையில், ஹிட் அடித்த ’மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு டான்சிங் ரோஸ் ஷபீர் உற்சாகமுடன் அவரது பாக்ஸிங் ஸ்டைலிலேயே நடனமாகியிருக்கிறார். இந்த வீடியோவை அமேசான் பிரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நிலையில்,விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post