💍தங்கம் விலையானது கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றத்தினைக் காணத் தொடங்கியுள்ளது.💍
எப்படியிருப்பினும் இன்று விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
கொரோனாவின் தாக்கத்தினை தொடர்ந்து கடந்த ஆண்டில் தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தினை தொட்டது. இந்த நிலையில் தற்போது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தோடு ஒப்பிடும்போது 9,000 ரூபாய் சரிவில் காணப்படுகிறது.
உச்சத்தில் இருந்து சரிவு தங்கம் விலையானது கடந்த ஆண்டு வரலாற்று உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10 கிராமுக்கு 9000 சரிவில் காணப்படுவது, நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்த நேரத்தில் நீண்டகால நோக்கில் வாங்கலாமா? இது சரியான வாய்ப்பா? இன்னும் குறையுமா? அடுத்து என்ன செய்யலாம் என பல கேள்விகள் எழுந்துள்ளன.
முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் தங்கத்தின் முக்கிய ரெசிஸ்டன்ஸ் லெவல் 1,815 டாலர்களாகும். இதனை உடைத்தால் சந்தையில் இன்னும் ஏற்றம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தங்கம் விலையானது 1789 டாலர்கள் என்ற நிலையில் சற்று குறைந்து காணப்படுகிறது. இது வார மற்றும் தினசரி கேண்டில்களில் சற்று அதிகரிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல் தங்கம் விலையை போல வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவலும் 23.90 டாலர்களாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக இதனை உடைத்துக் காண்பித்தால், இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இது தற்போது 23.867 டாலர் என்ற நிலையில் காணப்படுகிறது.
வெள்ளியின் ரெசிஸ்டன்ஸ் லெவல் தங்கம் விலையை போல வெள்ளியின் முக்கிய சப்போர்ட் லெவலும் 23.90 டாலர்களாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆக இதனை உடைத்துக் காண்பித்தால், இன்னும் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. இது தற்போது 23.867 டாலர் என்ற நிலையில் காணப்படுகிறது.
டாலர் மதிப்பு நிலவரம் என்ன? தற்போது அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், டாலரின் மதிப்பும் வலுவடைந்து வருகின்றது. இதனை தொடர்ந்து கடந்த சில வாரங்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வந்த பத்திர சந்தையும் தற்போதும் மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இது தங்கம் விலைக்கு எதிராக அமைந்துள்ளது. எனினும் கொரோனாவின் தாக்கத்தினால் இது பொருளாதாரத்தில் மீண்டும் தாக்கம் இருக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.