மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்து விழிப்புணர்வு.. சிவகார்த்திகேயன் நடிப்பில் பாடல் வெளியீடு!
byAJAY SELVAN•
0
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்:
இன்று (5-ம் தேதி) காலை 9.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து பெரு நிறுவன சமூக பொறுப்பு நிதி (சி.எஸ்.ஆர்.) திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
பின்னர் விமானம் மூலம் காலை 11.40 மணிக்கு புறப்பட்டு சென்னை செல்கிறார். முதல்வர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகையையொட்டி, கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் சேலம் டிஐஜி மகேஸ்வரி, எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி மற்றும் போலீஸார் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.