விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

 விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு


விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

’நானும் ரெளடிதான்’ வெற்றிக்குப்பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மீண்டும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்துள்ளனர். மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. 

மேலும், படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.  இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் ‘ரெண்டு காதல்’ பிப்ரவரி 14 காதலர் தினத்தையொட்டி வெளியான நிலையில், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி ‘டூ.. டூ.. டூ’ இரண்டாவது பாடல் வெளியாகும் என்று படக்குழு தற்போது அறிவித்திருக்கிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post