😎வெளியானது 'அண்ணாத்த' ஃபர்ஸ்ட் லுக் - ரசிகர்கள் உற்சாகம்😎

 வெளியானது 'அண்ணாத்த' ஃபர்ஸ்ட் லுக் - ரசிகர்கள் உற்சாகம்😎


ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

   சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  


 இந்நிலையில், அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளது படக்குழு. வேட்டி, சட்டையில் கெத்தாகவும் ஸ்டைலாகவும் ரஜினிகாந்த் நிற்கும் அண்ணாத்த படத்தின் போஸ்டரை கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

 இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post