😍சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.😍
சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அண்ணாத்த. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். மேலும் வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரஜினிகாந்தின் (Rajinikanth) அண்ணாத்தே (Annaatthe) படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் 2020-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் டிசம்பர் 13-ம் தேதி சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றனர். ஒருவாரத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டு மீண்டும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி படப்பிடிப்பு நிறைவடைந்தது.