அக்டோபரில் தியேட்டர்களில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

 அக்டோபரில் தியேட்டர்களில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். 'டாக்டர்’ படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்பு தமிழக சட்டமன்றத் தேர்தலால் அம்முடிவு மாற்றப்பட்டு ரம்ஜான் பண்டிகை அன்று மே 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

கொரோனா சூழலால், அன்றும் வெளியாகவில்லை. இப்படி தேதிகள் தள்ளிக்கொண்டே சென்ற நிலையில்,தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. வரும் அக்டோபர் மாதம் தியேட்டர்களில் வெளியாகும் என்று தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அக்டோபர் 14 ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாவதாக சொல்லப்படுகிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post