😍’வலிமை’ வில்லன் கார்த்திகேயா பிறந்தநாள்: போஸ்டர் வெளியிட்ட போனி கபூர்😍

 😍’வலிமை’ வில்லன் கார்த்திகேயா பிறந்தநாள்: போஸ்டர் வெளியிட்ட போனி கபூர்😍

அஜித்தின் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடித்துள்ள நடிகர் கார்த்திகேயாவின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.


எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் முக்கியமான சண்டைக் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், அதற்காக அஜித் உள்ளிட்ட 'வலிமை' படக்குழுவினர் தற்போது ரஷ்யா சென்று படப்பிடிப்பை முடித்தனர். அங்கு பைக் சாகச காட்சிகளும் படமாக்கப்பட்டன.

‘வலிமை’ டீசர் அடுத்தவாரம் வெளியாகவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இன்று தனது 29 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, ‘வலிமை’ தயாரிப்பாளர் போனி கபூர் கார்த்திகேயாவின் புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். இதுவரை, அஜித்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திகேயாவிற்க்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post