ஓடிடியில் வெளியான படங்கள் தியேட்டரில் திரையிடப்படாது - திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டு வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைய தொடங்கியவுடன் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் திரையரங்குகளை 50% இருக்கைகளுடன் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடும்போது 4 மாதங்களுக்குப் பிறகு அந்த படங்களை திரையரங்குகளில் வெளியிட்டுக்கொள்ளலாம் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. தற்போது 4 மாதங்கள் முடிவடைந்த சில திரைப்படங்களின் உரிமையாளர்கள் அவற்றை திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.
