செப்டம்பர் 17-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்’

விஜய் ஆண்டனியின் 'கோடியில் ஒருவன்' வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.


ஜீவாவின் ’டிஷ்யூம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. ஆனால், முதலில் வெளியானது ‘சுக்ரன்’ படம்தான். அதனைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதிலிருந்து, நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர், 14 வது படமாக ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில், ஆத்மிகா ஹீரோயினாக நடிக்க அறிமுக இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். வில்லனாக ’வில்லன் ’கருடன்’ ராமச்சந்திர ராஜு நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் ’கோடியில் ஒருவன்’ தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post