👏வந்துவிட்டது.. சென்னை மாநகராட்சியில் "இலவச WI-FI"..!👏

 சென்னை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச WIFI சேவை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு WIFI தொடர்பை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை, அசோக் பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட மாநகரின் 46 பகுதிகளில் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கம்பங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து, சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு WI-FI தொடர்பை மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். WI-FI வசதி பெறுவதற்கு கைப்பேசி எண்ணை பதிவு செய்து, ஓ.டி.பி மூலம் இந்த சேவையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post