பெண் பயணியை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர் தென்காசி அருகே பரபரப்பு..!
byAJAY SELVAN•
0
பெண் பயணியை தாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர் தென்காசி அருகே பரபரப்பு..!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர் பெண் பயணி ஒருவரை ஆபாசமாக பேசி தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடையம் ஆலங்குளம் இடையே செல்லும் அரசு பேருந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓட்டுநர் முப்புடாதி முத்து என்பவர் இயக்கி சென்றுள்ளார்.
உத்தமன் விளக்கு கிராமத்தில் பேருந்து நிலையம் பெண் பயணி ஒருவர் தனது மகள் வந்து கொண்டிருக்கிறார் எனவும் சில வினாடிகள் பேருந்தை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து ஓட்டுநர் முப்புடாதி முத்து அவரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது பதிலுக்கு அந்த பெண்ணும் ஒருமையில் பேசவே வாக்குவாதம் முற்றி இருக்கிறது.
காவல் நிலையம் சென்ற நிலையில் இருவரையும் சமாதானம் செய்து போலீஸார் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது இருப்பினும் முப்புடாதி முத்துவை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.