Direct OTT-ல் வெளியாகும் இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்த படம்!!! எந்த OTT?... எந்த தேதி?... தெரியுமா?

 இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் நாள் வெளியாகவுள்ளதாக இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வி. ராஜலட்சுமியின் பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு, பிரபல வினியோகஸ்தர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் இணைந்து கசடதபற படத்தை தயாரித்திருக்கிறார். 

இயக்குனர் சிம்பு தேவன் புலி படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், ரெஜினா கேஸண்ட்ரா, விஜயலட்சுமி , பிக்பாஸ் ஜனனி ஐயர், ஹரீஷ் கல்யாண், சந்தீப் கிஷன்,  ஜெய், மிர்ச்சி சிவா, சாந்தனு, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம்  சிஎஸ், பிரேம் ஜி அமரன் மற்றும் ஷான் ரோல்டன் உள்ளிட்ட 6 பேர் இசையமைத்திருக்கிறார்கள். மேலும் எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.டி.விஜய் மில்டன், பாலசுப்ரமணியம், ஆர்.டி ராஜசேகர் மற்றும் எஸ்.ஆர்.கதிர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். காசி விஸ்வநாதன், ராஜா முஹமது, ஆண்டனி, பிரவீன் KL, விவேக் ஹர்ஷன் மற்றும் ரூபன் ஆகியோர் படத்தொகுப்பு செய்துள்ளனர். 

இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வருகிற ஆகஸ்ட் 27 ஆம் நாள் வெளியாகவுள்ளதாக இயக்குனர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

Z

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post