அதிவிரைவில் வாட்ஸ்-அப்பில் வரவுள்ள மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சம்

 அதிவிரைவில் வாட்ஸ்-அப்பில் வரவுள்ள மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சம்


உலக மக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்று வாட்ஸ்-அப் செயலி. அதனால் தனது பயனர்களுக்கு சிறப்பான பயனர் அனுபவத்தை கொடுக்கும் நோக்கில் புது புது அம்சங்களை வாட்ஸ்-அப் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புதிதாக வாட்ஸ்-அப்பில் மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனை WaBetaInfo தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் இந்த அம்சம் உள்ள நிலையில் அதை தங்கள் தளத்திலும் சேர்க்க வாட்ஸ்-அப் முயற்சி செய்து வருகிறதாம். 

இதன் மூலம் சேட் பாக்ஸில் ஒருவர் அனுப்பும் மெசேஜுக்கு எமோஜிகள் மூலம் ரியாக்ஷன் கொடுக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு இந்த எமோஜிகளின் தீம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளம்போல இருக்குமா என்பது சஸ்பென்ஸாக உள்ளது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post