’கேஜிஎஃப் 2’ படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

 ’கேஜிஎஃப் 2’ படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

 ராகவா லாரன்ஸின் ’ருத்ரன்’ படம் யஷ்ஷின் ‘கேஜிஎஃப் 2’ படத்துடன் தியேட்டர்களில் மோதுகிறது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ’காஞ்சனா 3’ படம் வெளியானது. அதன்பிறகு, அவர் அக்‌ஷய் குமாரின்‘லஷ்மி’ படத்தை இயக்கினார். இந்த நிலையில், தற்போது ’ருத்ரன்’, ‘அதிகாரம்’, ’துர்கா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், கடந்த ஆண்டு இறுதியில் துவக்கப்பட்ட ’ருத்ரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதிதான் தற்போது வெளியாகி இருக்கிறது. ’பொல்லாதவன்’, ’ஆடுகளம்’, ’ஜிகர்தண்டா’ படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ‘ருத்ரன்’ படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில், ’ருத்ரன்’ அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என்று ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். அதேதேதியில்தான், தென்னிந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள ‘கேஜிஎஃப் 2’ திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகிறது. ’கேஜிஎஃப் 2’ படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post