கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி அன்று கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டான் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பமானது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீயாய் நடந்து வருகின்றன. இதையடுத்து லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்ஷனும் ஒன்றாக இணைந்து டான் என்ற படத்தை தயாரிக்க உள்ளது.