கஞ்சா இளைஞர் பேருந்து நிலையத்தில் ரகளை.. பயணிகளை அடித்து ஓடவிட்ட கொடுமை..! பரபரப்பான காட்சிகள்!

 திருவண்ணாமலை நகரம் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் வெறிபிடித்த சுற்றிய இளைஞன் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளைத் தாக்கி திரட்டினார்.

பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளையும் உடைத்து ரகளையில் ஈடுபட்ட அவனை கண்டு எல்லோரும் அஞ்சி ஒதுங்கி நின்றனர்.

அங்கு கொய்யாப்பழம் வியாபாரம் செய்த மூதாட்டியை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து விரட்டிவிட்டு போலீசார் முன்னிலையிலேயே அவரது பழக்கூடை கிரிக்கெட் விளையாடுவதை போன்று கூட கை அடித்து  நாசம் செய்தான்.

அவரை நெருங்க பயந்து தயங்கிக் கொண்டிருந்த நேரம் அங்கு உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் சாமர்த்தியமாக அவனது பிடரியைப் பிடித்து தள்ளினார் அடுத்த நொடி மக்கள் ஆவேசத்துடன் சுற்றி வளைத்து அந்த நபரை அடித்து உதைத்தனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post