🔥கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’: படத்திற்காக 15 கிலோ எடையைக் குறைத்த சிம்பு🔥

 கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக நடிகர் சிம்பு 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.

’விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தவாரம் திருச்செந்தூரில் தொடங்கியது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கவனம் ஈர்த்தது. 

இந்நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்பை படக்குழு தற்போது முடித்துள்ளது. அதோடு, இப்படத்தில் சிறுவயது தோற்றத்திற்காக சிம்பு 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார். ‘சிம்புவா இது’ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு உடல் மெலிந்து உண்மையிலேயே 16 அல்லது 17வயது சிறுவனின் தோற்றத்தை கொண்டு வந்துள்ளார். படக்குழு வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருக்கிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post