😍ராகவா லாரன்ஸ் நடிக்கும் "துர்கா"! திடீரென ரிலீசான பர்ஸ்ட் லுக் போஸ்டர்!😍

 ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து தயாரிக்கும் படத்தின் அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். 

ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த மூன்று படங்களுமே வெற்றிவாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதனால் ராகவா லாரன்ஸ் பேய் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அடுத்தாக தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து, கதாநாயகனாக "துர்கா" படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவுப்பு விரைவில் வெளியிப்படவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் தற்போது ஆடுகளம் கதிரேசன் தயாரித்து, இயக்கும் "ருத்ரன்" படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரித்து, கதை எழுத, துரை செந்தில்குமார் இயக்கும் "அதிகாரம்" படத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post