🛵ஆக.14: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைவு🛵

 சென்னை: சென்னையில் இன்று (ஆக.,14), பெட்ரோல் லிட்டருக்கு 99.47 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 102.49 ரூபாய், டீசல் லிட்டர் 94.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. சென்னையில் நேற்றைய நிலவரப்படி, லிட்டர் பெட்ரோல் விலை, 102.49 ரூபாயாக உள்ளது.அதில், தமிழக அரசுக்கு, மதிப்பு கூட்டு வரியாக, 15 சதவீதம் மற்றும் அதனுடன், 13.02 ரூபாயும் சேர்த்து வருவாய் கிடைக்கிறது.'பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி, மூன்று ரூபாய் அளவிற்கு குறைக்கப்படும்' என, தமிழக அரசின் பட்ஜெட்டில், நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.02 குறைந்து ரூ 99.47 ஆகவும், டீசல் விலையில் கடந்த 31 நாட்களாக மாற்றமின்றி லிட்டருக்கு ரூ 94.39 ஆக உள்ளது. மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது. கடந்த 28 நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை; டீசல் விலையிலும் கடந்த 30 நாட்களாக மாற்றமில்லை..

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post