அத்தியாவசியக் கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதி..!

 கடைகள் , ஓட்டல்கள் திறப்பு நேரம் குறைப்பு.. கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்.

கோவை: கோவை கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிறுகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் மாலை நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கூடுதலாக கீழ்கண்ட கட்டுப்பாடுகள் 02.08.2021 முதல் விதிக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருத்தகம், காய்கறி கடைகள் | வீர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post