😎ஷாருக்கான் - அட்லீ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய்?😎

 ஷாருக்கான் - அட்லீ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் விஜய்?😎

\

ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா ஆகியோர் நடிக்கிறார்கள். புனேவில் கடந்தவாரம் தொடங்கிய படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா,பிரியாமணி உள்ளிட்டோர் இணைந்தனர். யோகி பாபு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜவான்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, விஜய், பிரபுதேவா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் ’ரவுடி ரத்தோர்’படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post