😎😻“நாங்க வரோம்” - ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு😎😻

 😎😻“நாங்க வரோம்” - ஹர்பஜன் சிங்கின் ‘பிரண்ட்ஷிப்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு😎😻


ஹர்பஜன் சிங்கின் ’பிரண்ஷிப்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த லாஸ்லியா ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.




சமீபத்தில், இப்படத்தின் டீசர் கவனம் ஈர்த்த நிலையில், நடிகை லாஸ்லியா தேவாவுடன் பாடிய ’அடிச்சி பறக்கவிடுமா’ பாடலும் வெளியானது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி ’பிரண்ட்ஷிப்’ தியேட்டர்களில் வெளியாகிறது.




இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் “நாங்க வரோம். உங்க ஆதரவோட உங்கள மகிழ்விக்கணும் அப்பிடுகிற எண்ணத்தோட "செப்டம்பர் 17" நம்ம படம் உலகம் முழுக்க தியேட்டர் ரிலீஸ். சூப்பர்ஸ்டார், தல, தளபதி படம் மாதிரி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார், ஹர்பஜன் சிங்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post