அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

 அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 சீசன், கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19-இல் துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதில் பங்கேற்பதற்காக ஏற்கெனவே அனைத்து வீரர்களும் அமீரகம் சென்றுவிட்டனர். அங்கு கட்டாய 6 நாள் தனிமைப்படுத்தலுக்கு பின்பு வீரர்கள் தங்களது பயிற்சிகளை தொடங்கியிருக்கின்றனர்.

இந்நிலையில், வரும் சனிக்கிழமை துபாயில் நடைபெற இருக்கும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.iplt20.com மற்றும் PlatinumList.net என்ற இணையதளத்திலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் அமீரகத்தில் இரண்டாம் கட்டமாக ஐபிஎல் தொடங்க இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆடுகளங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும் அமீரகம் மற்றும் ஓமனில் உலகக் கோப்பை டி20 நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post