பூஜையுடன் தொடங்கிய விஜய் ஆண்டனியின் ’பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பு

 பூஜையுடன் தொடங்கிய விஜய் ஆண்டனியின் ’பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பு

பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இயக்குகிறார். 'பூ' சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’பிச்சைக்காரன்’. அந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருந்தார். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு ’பிச்சைக்காரன்’ முதலாம் பாகத்தை சசி இயக்கினார். தமிழகத்தை தாண்டியும் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்திருந்தது. குறிப்பாக, ஆந்திராவில் ரூ.20 கோடி ரூபாய் வசூல் செய்தது.


இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து ’பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கி நடிக்கிறார் விஜய் ஆண்டனி. சமீபத்தில், இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று சென்னையில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தினார். அதோடு, ’பிச்சைக்காரன்’ படத்தை இயக்கிய சசியும் பங்கேற்று வாழ்த்தினார். விஜய் ஆண்டனியே இப்படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post