அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கொரோனா.!

 அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கொரோனா.!


நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பையொட்டி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. பள்ளி வளாகங்களில் முழுமையான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில், பள்ளிகள் திறந்து 3 நாட்களே ஆன நிலையில், நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post