என்னது VIGNESH SHIVAN-க்கும், NAYANTHARA-க்கும் ரகசியமா ENGAGEMENT ஆகிடுச்சா😱

“Engagement மோதிரமா?”.. மனம் திறக்கும் நயன்தாரா! தாறுமாறு ப்ரோமோ Video! நிகழ்ச்சி எப்போ?

நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் ஓடிடி சேனலில் நேரடியாக வெளியாகி ஒளிபரப்பாகிறது.

பார்வை மாற்றுத்திறனாளியாக நயன்தாரா நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தின் டிரைலர் அண்மையில்தான் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வந்தது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தான் நடிகை நயன்தாரா, விஜய் டிவியல் சிறப்பு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கிற நிகழ்ச்சியில் பங்குபெறும் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த ப்ரோமோவில் நடிகை நயன்தாராவை விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடி பேட்டி எடுக்கிறார். அந்தப் பேட்டியில் நயன்தாரா பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாக நயன்தாரா தம் கையில் அணிந்திருக்கும் மோதிரம் என்கேஜ்மென்ட் மோதிரமா என்பது பற்றிய விளக்கத்தைக் கூறுகிறார்.

இதேபோல் விக்னேஷ் சிவனை எந்த அளவுக்குப் பிடிக்கும்? அவரிடம் பிடித்ததெல்லாம் என்ன? என்று டிடி கேட்கும் கேள்விகளுக்கும் நயன்தாரா பதில் அளிக்குமாறு இந்த ப்ரோமோ அமைந்திருக்கிறது. விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 10.30 மணிக்கு இந்த சிறப்பு நிகழ்ச்சி வெளியாகவிருக்கிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post