⚽பார்சிலோனாவில் இருந்து மெஸ்சி விலகல்... சம்பளம் கொடுக்க முடியாத நிலை..! ⚽

  ⚽கோவிட் தாக்கம் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்ட காரணத்தினாலும் மெஸ்சி விலகல்!⚽

கோவிட் தாக்கம் காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்ட காரணத்தினாலும் பார்சிலோனா 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாலும் தற்போதைய விதிகளின்படி கேட்கும் சம்பளம் கொடுக்க முடியாததால் பார்சிலோனாவில் இருந்து மெஸ்சி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி தான் விளையாடும் பார்சிலோனா கிளப் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அர்ஜெண்ட்டினா நாட்டின் கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி கடந்த 20 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இப்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டியில் பெய்ரன் முனிச் அணியுடன் 8-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி மெஸ்ஸியை பெரிதும் பாதித்ததாக கூறப்படுகிறது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post