சென்னைக்கு கிழக்கே வங்கக்கடல் பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவின் காக்கிநாடா அருகே 5.1 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது. காக்கிநாடாவில் இருந்து 296 கி.மீ. தொலைவில் கிழக்கு திசையில் கடலில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.