ஓடிடியில் வெளியாகிறது மறைந்த நடிகர் விவேக் தொகுத்து வழங்கிய கடைசி நிகழ்ச்சி

 ஓடிடியில் வெளியாகிறது மறைந்த நடிகர் விவேக் தொகுத்து வழங்கிய கடைசி நிகழ்ச்சி!

எல்ஓஎல் LOL - Last One Laughing 'எங்க சிரி பார்ப்போம்' என்ற இந்த நகைச்சுவைத் தொடர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமேசான் பிரைம் வீடியோ வெளியாகி வெற்றிபெற்றது. இதன் தமிழ்ப் பதிப்பைதான் நடிகர் விவேக், நடிகர் சிவா உடன் இணைந்து தொகுப்பாளராகவும், ஷோவின் நடுநிலையாளாராகவும் பங்காற்றி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்டின்படி, பத்து காமெடியன்கள் ஓர் அறையில் தங்க வைக்கப்படுவர். அந்த பத்து பேரும் ஒருவரை ஒருவர் சிரிக்க வைக்கவேண்டும். இதில்  கடைசியாக யார் யார் சிரிக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும்.

பல நாடுகளில் உருவாக்கப்பட்டு வெற்றிகண்ட இந்தத் தொடரின் இந்தி பதிப்பு கடந்த ஏப்ரலில் வெளியாகியது. தற்போது இது தமிழிலும் வெளியாக இருக்கிறது. மொத்தம் ஆறு எபிசோடுகள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக காமெடி நடிகர்கள் சதீஷ், பிரேம்ஜி, பவர்ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி, குக் வித் கோமாளி புகழ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், அபிஷேக் குமார், மாயா கிருஷ்ணன், ஷியாமா ஹரிணி, பேகி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். வரும் 27-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் விளம்பர வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் விவேக் உடன் தொடரை தொகுத்து வழங்கிய அனுபவம் பற்றி பேசியுள்ள நடிகர் சிவா, "எனக்கு பிடித்த கலைஞர் விவேக் சார். அவருடன் இணைந்து நான் கடைசியாக பணியாற்றியது இந்தப் படப்பிடிப்பின்போதுதான் என்பதால் எல்ஓஎல் நிகழ்ச்சி என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. தனது பன்முகத்தன்மையால் விவேக் சார் ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கூடுதல் சிரமம் எடுத்து பணிபுரிந்தார். அவரின் உழைப்பால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக வந்துள்ளது. அவருடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது எனக்கு ஓர் அற்புதமான தருணமாக அமைந்தது" என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார். 

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post