தியேட்டரில் வெளியாகும் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று?

 தியேட்டரில் வெளியாகும் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று?


சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

சூர்யா தயாரித்து நடித்த சூரரைப்போற்று திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி நேரடியாக அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. கேப்டன் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. அனைத்து தரப்பு ரசிகர்களும் சூரரைப்போற்று படத்தை பார்த்து ரசித்தனர். இந்த நிலையில் ஊரடங்கு முடிவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால், சூரரைப்போற்று திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. 

அவ்வாறு வெளியிடப்பட்டால் வசூல் செய்யும் முழுத்தொகையும், திரையரங்கு உரிமையாளர்களும், திரையரங்கு உரிமையாளர் சங்கமும் பகிர்ந்துகொள்ள 2டி நிறுவனம் முன்மொழிந்துள்ளது.  இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தால் இந்த வாரமே சூரரைப்போற்று திரையரங்கில் வெளியாக வாய்ப்பு உள்ளது. அதேபோல் நேரடியாக ஓ.டி.டியில்  வெளியான திரைப்படங்களை நான்கு மாதங்கள் கழித்து திரையரங்குகளில் வெளியிட்டுகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post