தள்ளிப்போகும் தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்பு!

 தள்ளிப்போகும் தனுஷ் - செல்வராகவன் படப்பிடிப்பு!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதம் தள்ளி சென்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் - செல்வராகவன் காம்போவை மீண்டும் திரையில் காண வேண்டும் என அவரது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் இருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதற்கான அறிவிப்பு வெளியானது. 'மயக்கம் என்ன' திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் செல்வராகவன் இணையும் இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ஆனால், தற்போது தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் வரை நடைபெறுகிறது. அதை முடித்துக்கொண்டு செல்வராகவன் திரைப்படத்தில் தனுஷ் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட தனுஷ் செல்வராகவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாத காலம் கழித்து நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post