தமிழகத்தில் சரசரவென இறங்கிய கொரோனா.. இன்று 1,797 பேருக்கு பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,908 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மெதுவாக குறைந்து வருகிறது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பாதிப்பவரகளின் எண்ணிக்கைவிட அதிகமாகி உள்ளது. அதாவது பாதிப்பு முன்பைவிட ஓரளவு குறைந்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1,797 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 25,94,233 ஆக உயர்ந்துள்ளது.
தேறியவர்கள்:
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,908 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,39,540 ஆக உயர்ந்துள்ளது.
கொரேனா உயிரிழப்பு :
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 31 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,610 ஆக உயர்ந்துள்ளது.